👉 உலக திருமண தினம்
🌷 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.
🌷 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி IBM சதுரங்கக் கணினி 'Deep Blue' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
🌷 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி IBM சதுரங்கக் கணினி 'Deep Blue' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
🌂 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌂 குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.
🌂 இந்த நாளில் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது.
🌂 இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.
💑 உலக திருமண தினம் பிப்ரவரி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10) கொண்டாடப்படுகிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
💉 உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (John Franklin Enders) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
💉 இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்.
💉 போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் (poliomyelitis) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
💉 இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.
💉 வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் தனது 88வது வயதில் (1985) மறைந்தார்.
🌷 ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமான போரிஸ் பாஸ்டர்நாக் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் பிறந்தார்.
🌷 இசைப் பயிற்சி பெற்ற பிறகு கலைத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. பிறகு 1910இல் மாபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளின் கீழ் தத்துவம் பயின்றார்.
🌷 1914இல் எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins In the clouds(1914), Over the Barriers (1917), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
🌷 மேலும் இவர் 'கடைசிக் கோடைகாலம்' (The last summer) மற்றும் இவரது சுயசரிதையான Safe conduct(1931) என்ற நாவலை எழுதினார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தும் உள்ளார்.
🌷 முதலாம் உலகப் போர்க் காலகட்டத்திலேயே இவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இவர் இப்புதினத்தை 1948இல் எழுத ஆரம்பித்தார். அதனை முடிக்க இவருக்கு சுமார் 10 வருடங்கள் ஆயிற்று.
🌷 1903ம் ஆண்டு வரையில் மருத்துவராகவும், கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இந்நூல் 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் பெற்றது.
🌷 கலை துறைக்கு தன்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்த போரிஸ் பாஸ்டர்நாக் தனது 70வது வயதில் (1960) மறைந்தார்.
Social Plugin