🌷 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி இந்திய சமூக சேவகர் பாபா ஆம்தே மறைந்தார்.
🌷 மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார்.
🌷 இவர் பட்டம் பெற்ற பிறகு பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்கள், கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
🌷 நோய் எதிர்ப்பாற்றல் துறை வல்லுநர் மெல்வினுடன் இணைந்து செரிமான நொதியை உற்பத்தி செய்ய ஒரு உள் சமிக்ஞை தேவைபடுவதை 1943ஆம் ஆண்டு இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து பொதுவான தூண்டல் கோட்பாட்டை வெளியிட்டனர்.
🌷 இவர் விஞ்ஞானி ஜேக்கப்புடன் இணைந்து புரோட்டீன் தொகுப்பு மாதிரியை உருவாக்கினார். மேலும் ஆப்ரேட்டர், கட்டமைப்பு மரபணு என்ற 2 முக்கியமான மரபணுக்களையும் கண்டறிந்தனர்.
🌷 இவர் பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்புக்காக 1965ஆம் ஆண்டு இவர்கள் மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 மூலக்கூறு உயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 66வது வயதில் (1976) மறைந்தார்.
Social Plugin