👉 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
👉 நகைச்சுவை நடிகை மனோரமா நினைவு தினம்
🌷 1974ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தமிழறிஞர் மு.வரதராஜன் மறைந்தார்.
🌷 இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.
🌷 உலக மனநல மையம் (World Mental Health Federation) சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
🌷 இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனை மரண தண்டனையாகும். பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை இல்லை. தற்போது மரண தண்டனையைக் கொண்டுள்ள நாடுகளும் அதை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 2002ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி ரோம் நகரில் கூடிய என்.ஜி.ஓ.க்கள் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மரண தண்டனை எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
🌷 புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் அக்டோபர் 10ஆம் தேதி 1906ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் எழுதிய The guide என்ற புத்தகம் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
🌷 இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி மறைந்தார்.
🌺 நவீன புறப்பரப்பு வேதியியல் களத்திற்காகவே அடித்தளமிட்ட ஜெர்ஹார்ட் எர்ல் 1936ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் பிறந்தார்.
🌺 திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக 2007-ம் ஆண்டில் இவரது 71-வது வயதில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.
🌷 தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.
🌷 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
🌷 இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா தனது 78வது வயதில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin