👉 சே குவேரா நினைவு தினம்
🌷 1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவரான வில்லியம் பாரி மர்பி (William P.Murphy) மறைந்தார்.
🌷 1879ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விளிம்பு விளைவை கண்டுபிடித்த மேக்ஸ் வோன் உலோ (Max Von Laue) பிறந்தார்.
🌷 1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் (Pieter Zeeman) மறைந்தார்.
🌷 1879ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி விளிம்பு விளைவை கண்டுபிடித்த மேக்ஸ் வோன் உலோ (Max Von Laue) பிறந்தார்.
🌷 1943ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி சீமன் விளைவை கண்டுபிடித்த பீட்டர் சீமன் (Pieter Zeeman) மறைந்தார்.
🌷 உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.
🌷 1969ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு டோக்கியாவில் நடைபெற்ற போது, அதில் உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாட வேண்டும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
🌷 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தார்.
🌷 விடுதலைப் போராட்டக்காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தார். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார்.
🌷 இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.
🌷 1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.
🌷 இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் தன்னுடைய 89-வது வயதில் (1987) மறைந்தார்.
🌺 'ஒடிசாவின் மாணிக்கம்' (உத்கல மணி) என்று போற்றப்பட்ட கோபபந்து தாஸ் 1877ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ஒடிசா மாநிலம், பூரி அருகே உள்ள சுவாண்டோ கிராமத்தில் பிறந்தார்.
🌺 'இளைஞர்கள் சுய சார்புடன், சுய சிந்தனை மிக்கவர்களாக, தியாகம் செய்ய முன்வருபவர்களாக, தேசத்தின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்' என்பார். இளைஞர்களிடம் தேசியத்தையும், தேசப்பக்தியையும் வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.
🌺 'குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடு முன்னேற தொழிற்கல்வியே முக்கியம்' என்று வலியுறுத்தினார்.
🌺 மனிதக்குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த கோபபந்து தாஸ் 50-வது வயதில் (1928) மறைந்தார்.
🌷 1967ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மனிதக்குல விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சே குவேரா மறைந்தார்.
Social Plugin