Type Here to Get Search Results !

நவம்பர் 11

👉 தேசிய கல்வி தினம்

👉 அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்


🌷 1889ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

🌷 1930ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர்.

🌷 1966 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நாசா ஜெமினி 12 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.



நினைவுறுத்தும் தினம்

🌷 நினைவுறுத்தும் தினம் நவம்பர் 11ஆம் தேதி பொதுநலவாயம் (Commonwealth of Nations) உறுப்பினர்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போரில் தனது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இத்தினத்தில் பொப்பி மலர்களை நினைவுக் குறியீடாக அணிந்துக் கொள்வார்கள்.

🌷 பொப்பிச் செடிகள், போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் அதிகமாக காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் வீரர்கள் சிந்திய இரத்தத்தின் நிறத்தை நினைவுபடுத்துகிறது.

🌷 முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும், ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இப்போர் நிறுத்தப்பட்டதையும், போரினால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.


மௌலானா அபுல்கலாம் ஆசாத்

🌷 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இவர் 1947ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தார்.

🌷 கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை (IIT) 1951ஆம் ஆண்டு உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

🌷 இவர் சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூறுவதற்காகவே இவரது பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

🌷 உயிரோடு இருந்தபோது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்பொழுது பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார். 1992ஆம் ஆண்டு இவரின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் தன்னுடைய 69வது வயதில் (1958) மறைந்தார்.


ஆச்சார்ய கிருபளானி

🌷 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தான் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி.

🌷 இவர் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌷 பின் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும், காங்கிரஸிலிருந்தும் விலகி, கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காக பணியாற்றி வந்த இவர் தனது 93வது வயதில் (1982) மறைந்தார்.