👉 எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பிறந்த தினம்
🌷 1994ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அமெரிக்க தடகள வீராங்கனை, வில்மா ருடோல்ஃப் மறைந்தார்.
🌷 உலக நிமோனியா (நுரையீரல் அழற்சி) தினம் ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தோடு நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி முதலாவது உலக நிமோனியா தினத்தை கடைபிடித்தனர். 2010ஆம் ஆண்டு முதல் இது நவம்பர் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
🌷 புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
🌷 இவர், தனது ஊர் பெயரில் உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன் ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
🌷 இவர் மொத்தம் 75 நூல்கள் எழுதியுள்ளார். இவரது 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலுக்காக 1978ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
🌷 'வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்' என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.
🌷 சுமார் 75 ஆண்டுகாலம் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் தன்னுடைய 85வது வயதில் (2006) மறைந்தார்.
🐥 இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி 1896ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
🐥 இவர் மும்பை இயற்கை வரலாற்று கழக நிர்வாகி மில்லர்ட் என்பவரை சந்தித்து, அவரிடம் இருந்து பறவைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்துகொண்டார்.
🐥 பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். இவர் 'கேரளப் பறவைகள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
🐥 இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் மட்டுமின்றி பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுள்ளார்.
🐥 மக்கள் இவரை 'பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்' என்றே அழைத்தனர். இவர் தன்னுடைய 90வது வயதில் (1987) மறைந்தார்.
Social Plugin