Type Here to Get Search Results !

அக்டோபர்12

👉 உலக ஆர்த்ரிடிஸ் தினம்


🌷 1918ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார்.

🌷 1964ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்ற முதலாவது விண்கலம் ஆகும்.

🌷 1999ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.


உலக ஆர்த்ரிடிஸ் தினம்

🌼 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

🌼 இத்தினம் கீல்வாத மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

🌼 நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.


எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி

🌷 கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்தார்.

🌷 இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

🌷 அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி ஜூன் 16, 1930ல் மறைந்தார்.