Type Here to Get Search Results !

பிப்ரவரி 12

👉 ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்

👉 சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்த தினம்


🌷 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் ஜி.யு.போப் மறைந்தார்.


ஆபிரகாம் லிங்கன்

🌷 அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்த வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார்.

🌷 இவர் நியு ஆர்லியன்சில் வசித்தபோது கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என தன்னுடைய சிறு வயதில் உறுதியெடுத்தார்.

🌷 இவர் தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தோல்விகளின் செல்ல மகனாக தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து, பிறகு 25வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் வென்றார்.

🌷 1860ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டுப் போர் 4 ஆண்டுகள் நடைபெற்று, எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

🌷 அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசிய கெஸ்டிஸ்பர்க் உரை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

🌷 1864ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய லிங்கன் தனது 56வது வயதில் (1865) மறைந்தார்.


சார்லஸ் ராபர்ட் டார்வின்

🌷 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

🌷 அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

🌷 இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.

🌷 தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.

🌷 அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.

🌷 தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

🌷 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு தனது 73வது வயதில் மறைந்தார்.