👉 சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்
🌷 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி மறைந்தார்.
🌷 சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்முறையாக 2005 டிசம்பர் 15ஆம் தேதி புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
🌷 கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த ஹென்றி பெக்கெரல் 1852ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
🌷 பெக்கெரல் 1896ஆம் ஆண்டு யுரேனியம் உப்பில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும்போது கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். 1903ஆம் ஆண்டு மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 கதிரியக்கத்தின் எஸ்.ஐ (SI) அலகு முறை இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது. இவர் தன்னுடைய 55வது வயதில் (1908) மறைந்தார்.
🌷 இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்க்கா சிங் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார்.
🌷 இவர் அமெரிக்காவில் அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் கோல்ஃப் அணியில் விளையாடி NCAA Division II individual Golf Championship பட்டத்தைப் பெற்றார்.
🌷 அக்டோபர் 2006ஆம் ஆண்டு இவர் உலகில் முதல் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார். 2007ல் இவர் இந்தியாவின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
🌷 இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
🌷 சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917ம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
🌷 சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 75வது வயதில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மறைந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Social Plugin