🌷 1946ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தாய்லாந்து ஐ.நாவில் இணைந்தது.
🌷 பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றி ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதியன்று 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்துவார்கள்.
🌷 இந்திய பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியருமான அடையார் கே.லட்சுமணன் 1933ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்னும் ஊரில் பிறந்தார்.
🌷 பரதநாட்டியம், மிருதங்கம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி பிரபலமான ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். இவர் பெரிய பெரிய வித்வான்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
🌷 1954ஆம் ஆண்டு இவர் பரதநாட்டியம், கர்நாடக இசை, நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் சிறப்புப் பட்டம் பெற்றார். மேலும் இவர் 1969ஆம் ஆண்டு பரதசூடாமணி அகாதமி என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி பல கலைஞர்களை உருவாக்கினார்.
🌷 இவர் பத்மஸ்ரீ விருது(1989), சங்கீத நாடக அகாடமி விருது(1991), கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
🌷 திருப்பாவை, அழகர் குறவஞ்சி, சந்தாலிக்க, சங்கத் தமிழ் மாலை ஆகிய நாட்டிய நாடகங்களைத் தயாரிக்க உதவிய அடையாறு கே.லட்சுமணன் தன்னுடைய 80வது வயதில் மறைந்தார்.
Social Plugin