Type Here to Get Search Results !

ஜூன் 15

👉 உலக காற்று தினம்


🌷 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்தார்.

🌷 1950ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உலகளவில் அதிக இரும்புகளை தயாரிக்கும் மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவரான இலட்சுமி மித்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார்.

🌷 1948ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளருமான அண்ணாமலை செட்டியார் மறைந்தார்.

🌷 1849ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேம்ஸ் போக் (James K. Polk) மறைந்தார்.


உலக காற்று தினம்

🌷 உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

🌷 இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.



அண்ணா ஹசாரே

🌷 சமூக ஆர்வலரான கிசான் பாபுராவ் ஹசாரே எனப்படும் அண்ணா ஹசாரே அவர்கள், 1937ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பிங்கார் என்னும் இடத்தில் பிறந்தார்.

🌷 சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவேயின் வாழ்க்கை வரலாறுகளை படித்த பிறகு ஏழைகள் மேம்பாட்டை தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டார். இவர் பத்ம பூஷன், பத்மஸ்ரீ, மஹாவீர் விருது, சர்வதேச ஒருமைப்பாட்டு விருது, சிட் கில் நினைவு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

🌷 காந்தியவாதியான அண்ணா ஹசாரே இன்று தனது 81வது வயதில் முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறார்.