Type Here to Get Search Results !

ஜூன்16

👉 சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்


🌷 1963ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்.

🌷 2012ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் சென்சூ விண்வெளி திட்டத்தின் ஒன்பதாவது விண் பயணத்தில் பயணித்த முதல் சீனப் பெண் என்ற பெருமையை லியு யங் பெற்றார்.


கருமுத்து தியாகராஜன் செட்டியார்

🌷 கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

🌷 இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.

🌷 இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

🌷 இவர் தமிழ்மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

🌷 கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81வது வயதில் (1974) மறைந்தார்.


சித்தரஞ்சன் தாஸ்

🌷 தேசபந்து என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் பிறந்தார்.

🌷 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

🌷 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார்.

🌷 1923ஆம் ஆண்டு நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924ஆம் ஆண்டு நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்று, சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டு வந்தவர் இவர் தான்.

🌷 சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் இவர் திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார். தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதி வைத்தார். இவர் தனது 54வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மறைந்தார்.