👉 நெப்போலியன் போனபார்ட் பிறந்த தினம்
🌷 1915ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
🌷 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தென் கொரியா உருவாக்கப்பட்டது.
🌷 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொங்கோ குடியரசு பிரான்ஸிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
🌷 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தென் கொரியா உருவாக்கப்பட்டது.
🌷 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொங்கோ குடியரசு பிரான்ஸிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
🌷 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
🌷 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
🌷 தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
🌷 பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கார்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.
🌷 இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக 1785-ல் பதவி ஏற்றார். 1796-ல் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804-ல் 35-வது வயதில் பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.
🌷 போர்களில் வெற்றியைக் குவித்தார். தேச நிர்வாகத்துக்கான புதிய சட்டங்களை உருவாக்கினார். இவை கோட் ஆஃப் நெப்போலியன் எனப்படுகின்றன. முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது என்ற தாரக மந்திரத்திற்குரியவரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 52வது வயதில் (1821) மறைந்தார்.
Social Plugin