👉 கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம்
🌷 1970ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் பிறந்தார்.
🌷 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
🌷 இத்தினம் 1987ஆம் ஆண்டு முதன்முதலாக பிரான்சில் பாரிஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐ.நா.சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
🌷 இதன் நோக்கம் வறுமையை போக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும்.
🌷 அமெரிக்காவின் ஒன்பதாவது துணை ஜனாதிபதியான ரிச்சர்ட் ஜான்சன் 1780 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயுவில் பிறந்தார்.
🌷 இவர் பன்னிரண்டாவது சட்டத் திருத்தத்தின் கீழ் அமெரிக்க செனட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே துணைத் தலைவர் ஆவார்.
🌷 இவர் 1806 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🌷 இவர் தனது 70வது வயதில் 1850 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி காலமானார்.
🌷 பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா.
🌷 காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.
🌷 இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
🌷 இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்களையும், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்களையும், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
🌷 ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 54வது வயதில் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin