Type Here to Get Search Results !

டிசம்பர்17

👉 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி பிறந்த தினம்


🌷 1797ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஜோசப் ஹென்றி (Joseph Henry) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். இவரது பெயராலேயே மின்தூண்டலுக்கான சர்வதேச அலகு 'ஹென்றி அலகு' என குறிக்கப்படுகிறது.

🌷 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் முதன்முதலில் 12 வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் (Wright Flyer) என்ற விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.


ஓய்வூதியர் தினம்

🌷 இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1982ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம், அரசுத்துறைகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுக்கூறும் வகையில், இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.


வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி

🌷 அமெரிக்க இயற்பிய வேதியியலாளர் வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி 1908ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி கொலராடோவிலுள்ள கிராண்ட் பள்ளத்தாக்கு (Grand Valley) என்னுமிடத்தில் பிறந்தார்.

🌷 தொல்லியல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (Radiocarbon Dating) முறையின் வளர்ச்சியில் இவர் அளித்த பங்களிப்பு காரணமாக இவர் புகழ் பெற்றார்.

🌷 இவர் எலியட் க்ரெஸ்ஸான் பதக்கம் (1957), வில்லார்ட் கிப்ஸ் பரிசு (1958), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது (1959), வேதியியலுக்கான நோபல் பரிசு (1960) போன்ற பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 71வது வயதில் (1980) மறைந்தார்.