👉 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தினம்
🌷 1859ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி இந்திய இராணுவத் தளபதி தாந்தியா தோபே மறைந்தார்.
🌷 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.
🌷 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.
🌷 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் ஜி. சுப்பிரமணிய ஐயர் மறைந்தார்.
🌷 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்தனர்.
🍀 உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
🍀 1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டே யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது.
🌷 மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்ட மகரிஷி தோண்டு கேசவ் கர்வே 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவர் விதவைத் திருமணங்கள் நடத்துவதும், இதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் மட்டுமே அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு கல்வி கற்பித்து, சொந்தக் காலில் நிற்க வைப்பது அவசியம் என தீர்மானித்து, இதற்காக அனாத் பாலிகாஷ்ரம் என்ற அமைப்பை தொடங்கினார்.
🌷 பெண்களுக்காக பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்தார். இவருடைய செயல்களுக்கு மகாத்மா காந்தியும் ஆதரவு அளித்து வந்தார். 1955ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார். 1958ஆம் ஆண்டு நூறாவது வயதில் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
🌷 மகரிஷி கர்வே என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர் 104வது வயதில் (1962) மறைந்தார்.
🌷 கீமோதெரபி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 1905ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் என்ற பகுதியில் பிறந்தார்.
🌷 1944ஆம் ஆண்டு இவர் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2,6-டைஅமினோப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டைஅமினோ பைரிமிடின் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்து வந்தார்.
🌷 கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவருடைய குழு வெளியிட்டது. இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக அவர்களுடன் கூட்டாக 1988ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதர்களுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 92வது வயதில் (1998) மறைந்தார்.
🌷 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
🌷 இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
🌷 இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு' பிறந்தது.
🌷 குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.
🌷 ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
🌷 இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்' என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் தனது 76வது வயதில் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin