🌷 1801ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உளவியற்பியலை உலகுக்கு தந்த குஸ்டாவ் தியடோர் ஃபெச்னர் (Gustav Theodor Fechner) ஜெர்மனியின் முஸ்காவ் நகருக்கு அருகே குரோப் ஸார்சன் என்ற ஊரில் பிறந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலை மலரின் உரிமையாளரான சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.
🌷 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான பியரி கியூரி மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் செ.குப்புசாமி மறைந்தார்.
🌷 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
🌷 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலை மலரின் உரிமையாளரான சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.
🌷 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான பியரி கியூரி மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் செ.குப்புசாமி மறைந்தார்.
🌷 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
🌷 இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.
🌷 இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஆவார். 2003-04ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
🌷 இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
🌷 'ரிலையன்ஸ்' என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குள்ளது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார்.
🌷 அதுமட்டுமல்லாமல், இவர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்குகிறார்.
🌷 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.
🌷 அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌷 இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.
🌷 தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
🌷 அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.
🌷 தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.
🌷 உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
Social Plugin