👉 ராணி லட்சுமிபாய் நினைவு தினம்
👉 அய்யங்காளி நினைவு தினம்
🌷 1858ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் மறைந்தார்.
🌷 விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
🌷 இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
🌷 எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பி.கக்கன் 73வது வயதில் (1981) மறைந்தார்.
🌷 பிரபல ஓவியர் கோபுலு 1924ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோபாலன்.
🌷 இவருக்கு இளம் வயதில் ஓவியத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஓவிய மேதை மாலியால் ஈர்க்கப்பட்டு அவரை சந்தித்து அவரது ஆதரவில் வளர்ந்து ஓவியரானார். 1941-ல் தீபாவளி மலருக்காக ராமர் பட்டாபிஷேகம் படத்தை வரைந்து வருமாறு மாலு கூறினார். அந்த ஓவியம் பாராட்டுகளைப் பெற்றது. பிறகு இவரது பெயரை கோபுலு என்று மாலி மாற்றினார்.
🌷 தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு போன்ற கதைகளின் கதாபாத்திரங்கள் இவரது கையில் உயிர்பெற்று வாசகர்களின் உள்ளத்தை கவர்ந்தவைகள். கலைமாமணி, எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
🌷 பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்த சாதனையாளர் கோபுலு, 90வது வயதில் (2015) மறைந்தார்.
🌷
அய்யன் காளி திருவிதாங்கூர் மாகாணத்தில் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகஸ்டு, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பிராமணீய வர்ணாசிரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை ஏரில் பூட்டி வயலை உழக் கட்டாயப்படுத்தினர். நாயர்களும், நம்பூதிரிகளும் இவர்களை அடிமைகளாக நடத்தினர். அக்கால கட்டத்தில் பட்டியல் சாதியினர் மீது கல்வி உரிமை மறுப்பு, பொதுத் தெருவில் நடமாடும் சுதந்திரம் இல்லாமை,பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமை போன்ற கொடுமைகள் நாயர் மற்றும் நம்பூதிரி சாதி மக்களால் நிகழ்த்தப்பட்டது.
Social Plugin