Type Here to Get Search Results !

ஜூன்19

👉 பிளைஸ் பாஸ்கல் பிறந்த தினம்

👉 வில்லியம் கோல்டிங் நினைவு தினம்

👉 வாசிப்பு தினம்


🌷 1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பிறந்தார்.


🌷 கேரள அரசு 1996 முதல் ஜூன் 19 ஐ வாசிப்பு நாளாக அனுசரித்தது. கேரள கல்வித் துறையும் ஜூன் 19 முதல் 25 வரை வாசிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. கேரள நூலக சங்கத்தின் நிறுவனர் மற்றும் பிரச்சாரகராக இருந்த புதுவாயில் நாராயண பானிகர் அல்லது பி.என். ஜூன் 19 என்பது பானிக்கரின் மரண ஆண்டுவிழா. கேரள அரசு அவரது மரண ஆண்டு விழாவை 1996 முதல் வாசிப்பு நாளாக அனுசரித்தது. பள்ளிகளில் மின் வாசிப்பை ஊக்குவிக்க வாசிப்பு கிளப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரம் கிளப்புகள் மற்றும் மின்னணு கிளப்புகளைத் தொடங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


பிளைஸ் பாஸ்கல்

🌷 உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார்.

🌷 இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல் ஆராய்ச்சி நூலில் கூம்பு வெட்டுகளைப் (Essay on Conics) பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், பாஸ்கல் தேற்றம் என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

🌷 1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதற்கு உதவியாக, கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி தந்தார். மேலும், இவர் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார்.

🌷 நிகழ்தகவு கோட்பாடு, பாஸ்கல் விதி, பாய்ம இயக்கவியல் விதி ஆகியவற்றை கண்டறிந்தார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் ளுஐ அலகிற்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

🌷 தனது தன்னம்பிக்கையால் விடாமுயற்சியுடன் சாதனை படைத்த பிளைஸ் பாஸ்கல் 39வது வயதில் (1662) மறைந்தார்.


சல்மான் ருஷ்டி

🌷 உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) 1947ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🌷 1981-ல் வெளிவந்த இவரது 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்'(Midnight's Children) புதினம் உலகளவில் பிரபலமாகி, புக்கர் பரிசையும் (Booker Prize) வென்றது.

🌷 இவர் இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். 1988-ல் இவர் 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை வெளியிட்டார். இவருக்கு இலக்கிய சேவைகளுக்காக 2007-ல் (Knight Bachelor) என்ற 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

🌷 1945-க்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13வது இடத்தை 'தி டைம்ஸ்' நாளிதழ் வழங்கியது. 2005-ல் இவரது 'ஷாலிமார் தி கிளவுன்' நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க 'ஹட்ச் கிராஸ்வேர்டு புக்' விருது கிடைத்தது.

🌷 உலகம் முழுவதும் பல்வேறு கௌரவமிக்க விருதுகளைப் பெற்ற இவர் தனது 71வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


வில்லியம் கோல்டிங்

🌷 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார்.

🌷 இவர் பல கதை, கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார்.

🌷 இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954-ல் எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது.

🌷 'ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ்' நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 73 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1988ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

🌷 சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் தனது 82வது வயதில் 1993ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மறைந்தார்.