Type Here to Get Search Results !

அக்டோபர்1

👉 சர்வதேச முதியோர் தினம்

👉 உலக சைவ தினம்

👉 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினம்

👉 அன்னி பெசண்ட் அம்மையார் பிறந்த தினம்


🌷 1971ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வால்ட் டிஸ்னி வேல்ட் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.


சர்வதேச முதியோர் தினம்

🌺 சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ஆம் தேதி 1991ஆம் ஆண்டுமுதல் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயதான மூத்த குடிமக்களுக்கும் உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலக சைவ தினம்

உலக சைவ தினம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


அன்னி பெசண்ட்

🌷 பெண் விடுதலைக்காகப் போராடிய அன்னி பெசண்ட் 1847ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 அன்னி பெசண்ட் இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிகையை 1913இல் துவங்கினார். 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

🌷 இந்திய விடுதலைக்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற அன்னி பெசண்ட் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சென்னையில் மறைந்தார்.



சிவாஜி கணேசன்

🌷 புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

🌷 தமிழ் திரையுலகில், பராசக்தி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

🌷 அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது மற்றும் செவாலியே விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தனது 74வது வயதில் (2001) மறைந்தார்.





Tags