Type Here to Get Search Results !

ஜுலை31

👉 தீரன் சின்னமலை நினைவு தினம்


🌷 1874ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழ் பெரும் புலவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான செய்குத்தம்பி பாவலர், நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் பிறந்தார்.

🌷 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.

🌷 1964ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர்-7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.


ஜே.கே.ரௌலிங்

🌷 உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

🌷 1990ம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர்.

🌷 1995-ல் 'ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார். அதை தொடர்ந்து, 'ஹாரிபாட்டர் அன்ட் சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்', 'ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்கபன்' அடுத்தடுத்து வெளிவந்தன.

🌷 இவரது 7 படைப்புகளும் உலகம் முழுவதும் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது என பல விருதுகள் குவிந்தன. ஹாரிபாட்டர் புதினத் தொடர்களை எழுதி புகழின் உச்சத்தை தொட்ட ஜே.கே.ரௌலிங் தனது 54வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


தீரன் சின்னமலை

🌷 இந்திய விடுதலைக்காக கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai) 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.

🌷 இவர் இருந்த பகுதி மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆட்சியின் கீழ் இருந்ததால் வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒருமுறை இவர் வரிப்பணத்தை கைப்பற்றி ஏழைகளிடம் கொடுத்தார்.

🌷 வரி கொண்டு சென்ற ஊழியரிடம் 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்ததாக மன்னரிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அப்போதிலிருந்து, 'சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

🌷 இவர் ஓடாநிலை என்ற ஊரில் கோட்டை கட்டி இளைஞர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார். பல ஆயுதங்களையும் தயாரித்தார். 1801, 1804-ல் நடந்த போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

🌷 இவரை போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு சூழ்ச்சி மூலம் இவரை தூக்கிலிட்டது. பிறந்த மண்ணின் விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்த தீரன் சின்னமலை தனது 49வது வயதில் 1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி மறைந்தார்.