Type Here to Get Search Results !

ஏப்ரல் 21

👉 தேசிய குடிமை பணிகள் தினம்

👉 பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்


🌷 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தார்.



தேசிய குடிமை பணிகள் தினம்

🌷 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

🌷 நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.



மேக்ஸ் வெபர்

🌷 உலக புகழ்பெற்ற சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள எர்ஃபர்ட் நகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மேக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர்.

🌷 இவர் 1903ஆம் ஆண்டு பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார்.

🌷 1905ஆம் ஆண்டு இவர் எழுதிய 'தி ப்ரொடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் கேப்பிடலிசம்' கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது. பின்பு அது புத்தகமாக வெளியிடப்பட்டது.

🌷 பொது நிர்வாகத்துறையிலும், சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளை தொடங்கி வைத்த மேக்ஸ் வெபர் தனது 56வது வயதில் (1920) மறைந்தார்.



வி.கிருஷ்ணமூர்த்தி

🌷 சிறுவர்களுக்கான கதை எழுதுவதில் சிறந்து விளங்கிய வி.கிருஷ்ணமூர்த்தி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.

🌷 இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் 'குல்ருக்' என்ற கதை எழுதினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து பத்திரிக்கைகள் மாநாட்டில் இவரது பத்திரிக்கை முதல் பரிசு பெற்றது.

🌷 இவர் கௌசிகன் என்ற புனைப்பெயரில் பல கதைகளை எழுதி வந்தார். ஆனந்தவிகடன் இதழின் ஓவியர் மாலி, இவரது திறனை அறிந்து, சிறுவர் கதைகள் எழுதுமாறு கூறி 'வாண்டு மாமா' என்று பெயர் சூட்டினார்.

🌷 கல்கியின் 'கோகுலம்' குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

🌷 60 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய இவர் தனது 89வது வயதில் (2014) மறைந்தார்.