Type Here to Get Search Results !

ஏப்ரல் 20

👉 அடால்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்


🌷 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தமிழக மிருதங்க கலைஞர் பழனி சுப்பிரமணிய பிள்ளை பிறந்தார்.


பிலிப் பீனல்

💉 'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை' என போற்றப்படும் பிலிப் பீனல் (Philippe Pinel) 1745ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

💉 சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத இவர் 15 ஆண்டுகாலம் எழுத்தாளராக இருந்தார்.

💉 பின்பு மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் மறைந்ததில் பாதிக்கப்பட்டு மனநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அது பற்றிய குறிப்புகளை தொகுத்து 'மெமோர் ஆன் மேட்னஸ்' (Memoir on Madness) என்ற கட்டுரையை 1794ஆம் ஆண்டு வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப்புத்தகமாக உள்ளது.

💉 மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்ட பிலிப் பீனல் தனது 81வது வயதில் (1826) மறைந்தார்.


சிட்டி சுந்தரராஜன்

🌷 தகவல் பெட்டகம் எனப் போற்றப்பட்ட 'சிட்டி' பெ.கோ.சுந்தரராஜன் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பெரியகுளத்தில் பிறந்தார்.

🌷 இவர் சிட்டி என்ற புனைப்பெயரில் நூல்களை எழுதினார். இது பெயருடன் நிரந்தரமாக இணைந்துவிட்டது. வ.ரா.(வ.ராமசாமி ஐயங்குயரர்), கு.ப.ரா.(கு.ப.ராஜகோபாலன்), புதுமைப்பித்தன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

🌷 இவர் 1975ஆம் ஆண்டு ஆதியூர் அவதானி என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டார். ஏராளமான சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

🌷 வித்தியாசமான படைப்பாற்றல், நகைச்சுவை உணர்வு அமையப்பெற்ற சிறந்த இலக்கிய அறிஞரான சிட்டி தனது 96வது வயதில் (2006) மறைந்தார்.


ஹிட்லர்

🌷 இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற இடத்தில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார்.

🌷 இவர் மிக சிறந்த ஓவியர். உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். 1934ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.

🌷 பெயரைக் கேட்டாலே உலகமே நடுங்கும் ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என்று அழைக்கப்படும் இவர் தனது 56வது வயதில் (1945) மறைந்தார்.