Type Here to Get Search Results !

ஜூன்21

👉 உலக இசை தினம்

👉 உலக யோகா தினம்


🌷 1948ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜாஜி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார்.

🌷 2001ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தென்னிந்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மறைந்தார்.

🌷 2002ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.


உலக இசை தினம்

🌷 இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.

🌷 வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அதிகரிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.


உலக யோகா தினம்

🌷 உலக யோகா தினம் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

🌷 யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.


ஜீன் பால் சார்த்

🌷 பிரான்ஸ் நாட்டின் தத்துவமேதை ஜீன் பால் சார்லஸ் அய்மார்டு சார்த் (Jean Paul Charles Aymard Sartre) 1905ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரீஸில் பிறந்தார்.

🌷 இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வானிலையாளராக பணிபுரிந்தபோது ஜெர்மன் படையினரிடம் பிடிபட்டு 9 மாதங்கள் போர் கைதியாக சிறையில் இருந்தார். அங்குதான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் பற்றி ஒரு நாடகம் எழுதினார்.

🌷 பின்பு இருத்தலியல் என்பது ஒரு மனிதநேயம் (Existentialism is a Humanism) என்ற தனது தத்துவக் கோட்பாட்டை 1946-ல் அறிமுகம் செய்தார்.

🌷 இவரது அற்புத இலக்கியப் படைப்புகளுக்காக 1964-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

🌷 சிறந்த தத்துவமேதை, நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வலர், இலக்கிய விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட ஜீன் பால் சார்த் தனது 74வது வயதில் (1980) மறைந்தார்.