🌷 1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் மறைந்தார்.
🌷 படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் (Ada Yonath) 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.
🌷 ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
🌷 20 ஆண்டுகால கடுமையான உழைப்பில் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை (ribosome) ஆன்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என்று கண்டறிந்தார். இவை ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்ய வழிவகுத்தன.
🌷 ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.
🌷 நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய இவர் இன்று 80வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
🌷 கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் (Dan brown) 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியு ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் (Exeter) பிறந்தார்.
🌷 பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்கு 1991-ல் வந்தார். மேலும், இவர் 'டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்', 'டிஸப்ஷன் பாயின்ட்', 'ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார்.
🌷 2003-ல் வெளிவந்த இவரது 'தி டாவின்சி கோட்' என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
🌷 தொடர்ந்து தன்னுடைய எழுத்து பணியை செம்மையாக செய்து வரும் டான் பிரவுன், தனது 55வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
Social Plugin