Type Here to Get Search Results !

மே 22

👉 உலக பல்லுயிர் பெருக்க தினம்

👉 உலக கோத் தினம்

👉 ராஜா ராம் மோகன் ராய் பிறந்த தினம்


🌷 1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

🌷இன்று இலங்கை குடியரசு தினம் : பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, 1972-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.


உலக பல்லுயிர் பெருக்க தினம்

உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ல் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


உலக கோத் தினம்

உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள்.

பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


ராஜா ராம் மோகன் ராய்

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய ராஜா ராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.

இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.

இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜா ராம் மோகன் ராய் தனது 61வது வயதில் (1833) மறைந்தார்.