👉 சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
👉 கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம்
🐢 உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதை தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
💉 வளரும் நாடுகளில் சுமார் 2-3.5 மில்லியன் பெண்கள் இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர்.
💉 ஆகவே, இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003-ல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
🌷 நவீன வகைப்பாட்டியலின் தந்தை, கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
🌷 புதுவகை தாவரங்களை கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது இயற்கையின் அமைப்பு (Systema Naturae) நூல் 1735-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
🌷 1753-ல் இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட தி ஸ்பீசிஸ் ஆப் பிளான்ட்ஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
🌷 தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் (1778) மறைந்தார்.
🌷 1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார்.
🌷 1906ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் மறைந்தார்.
Social Plugin