Type Here to Get Search Results !

அக்டோபர்22

👉 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்


🌷 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது.


உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்

🌷 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.


கிளிண்டன் ஜோசப் டேவிசன்

🌷 அமெரிக்க இயற்பியல் அறிஞர் கிளிண்டன் ஜோசப் டேவிசன் 1881ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பிறந்தார்.

🌷 மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டுபிடிப்பிற்காக 1937-ல் கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினை பகிர்ந்துகொண்டார். இவர் தனது 76வது வயதில் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மறைந்தார்.


அஸ்பகுல்லா கான்

🌷 சுதந்திர போராட்ட வீரர் அஸ்பகுல்லா கான் 1900ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் பிறந்தார். 1926ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையில் அதிகம் அறியப்பட்ட ஒரு இந்திய விடுதலைப் போராளி.

🌷 வர்சி மற்றும் ஹஸ்ரத் என்ற புனைப்பெயர் கொண்ட இவர் ஒரு புகழ்பெற்ற உருது கவிஞர். இவர் 1927ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தனது 27வது வயதில் மறைந்தார்.



அ.மாதவையா

🌷 தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

🌷 இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

🌷 சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அக்டோபர் 22ஆம் தேதி பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.