Type Here to Get Search Results !

ஏப்ரல் 23

👉 உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

👉 வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினம்


🌷 1644ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.

🌷 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதலாம் உலக தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.


உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்

📖 வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.


எஸ்.ஜானகி

🎼 தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.

🎼 சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர், நாதஸ்வர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.

🎼 1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

🎼 இளையராஜாவின் முதல் படத்தில் 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' மற்றும் 'மச்சானப் பார்த்திங்களா' போன்ற பாடல்கள், தமிழ்த் திரையிசையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல்மரியாதை படத்தில் ராசாவே உன்னை நம்பி என்பது முதல் துவங்கி தேசியவிருது பெற்றுத்தந்த 'இஞ்சி இடுப்பழகா' வரை உதாரணம் சொல்லலாம்.

🎼 ஜானகி ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் காதலன், உயிரே, ஜோடி, சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.


🌷 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ரோமியோ ஜூலியட்டை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்தார்.