👉 சாயி பாபா தினம்
👉 ஜி.யு.போப் பிறந்த தினம்
👉 சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்
🌷 1934ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் பிறந்தார்.
🌷 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆன்மிக குரு சத்திய சாயி பாபா மறைந்தார்.
🌷 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆன்மிக குரு சத்திய சாயி பாபா மறைந்தார்.
🌷 உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.
🌷 ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் (National Anti-Vivisection Society (NAVS)) 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஆம் தேதியை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
🌷 பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
🌷 பஞ்சாயத்து ராஜ்ஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.
🌷 ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார்.
🌷 இவர் 1839ஆம் ஆண்டு சமயப் பணிக்காக தமிழகம் வந்தார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
🌷 1886ஆம் ஆண்டு திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதேபோல் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தனது 87வது வயதில் (1908) மறைந்தார்.
🌷 உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
🌷 இவர் முதன்முதலாக 15வது வயதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
🌷 டெஸ்ட் போட்டியில் 10க்கும் மேலும், ஒருநாள் போட்டியில் 50க்கும் மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும் பல தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
🌷 உலக கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.
🌷 பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
Social Plugin