👉 சரண் சிங் பிறந்த தினம்
👉 விடுதலைப் போராட்ட வீரர் பி.கக்கன் நினைவு தினம்
🌷 1947ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
🌷 1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது.
🌷 1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
🌷 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒன்பதாவது இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார்.
🌷 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்தார்.
🌷 1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது.
🌷 1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
🌷 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒன்பதாவது இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மறைந்தார்.
🌷 2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார்.
🌷 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்தார்.
🌾 இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌾 உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🌾 இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
🌷 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.
🌷 சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் உழடடநஉவiஎளைவ நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
🌷 மேலும் இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.
🌷 எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு.சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
🌷 லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.
🌷 விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
🌷 இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
🌷 எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பி.கக்கன் 73வது வயதில் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin