👉 எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம்
👉 ஈ.வெ.ராமசாமி நினைவு தினம்
🌷 1818ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஜூல் வெப்பமாக்குதல் விதியை உருவாக்கிய ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் பிறந்தார். இவருடைய நினைவாக வேலையின் அலகு ஜூல் என்று அழைக்கப்படுகிறது.
🌷 1968ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
🌷 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திராவிடர் கழகத்தினை தோற்றுவித்த ஈ.வெ.ராமசாமி மறைந்தார்.
🌷 2002ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் வி.கே.ராமசாமி மறைந்தார்.
🌷 1950ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திரைப்பட நடிகர் பி.ஜி.வெங்கடேசன் மறைந்தார்.
🌷 1968ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
🌷 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திராவிடர் கழகத்தினை தோற்றுவித்த ஈ.வெ.ராமசாமி மறைந்தார்.
🌷 2002ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் வி.கே.ராமசாமி மறைந்தார்.
🌷 1950ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திரைப்பட நடிகர் பி.ஜி.வெங்கடேசன் மறைந்தார்.
🌷 இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
🌷 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
🌷 இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும், மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
🌷 சுதந்திரப் போராட்ட வீரரும் படைப்பாளியுமான பாண்டுரங்க சதாசிவ சானே 1899ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பம்பாயிலுள்ள பால்கட் என்ற கிராமத்தில் பிறந்தார்.
🌷 அமால்னர் நகரில் உள்ள பிரதாப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர், 1930-ல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கிய வேளையில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டார்.
🌷 சிறந்த படைப்பாளியான இவர் மொத்தம் 135 நூல்களை எழுதியுள்ளார். இவரது ஸ்யாமசி ஆயீ என்ற படைப்பு இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை மராத்தியில் மொழிபெயர்த்துள்ளார்.
🌷 மாணவர்கள் இவரை சானே குருஜி என இவரைப் போற்றினர்கள். தேசத்தின் குரு என போற்றப்பட்ட பாண்டுரங்க சதாசிவ சானே 50-வது வயதில் (1950) மறைந்தார்.
🌷 புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.
🌷 இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.
🌷 சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
🌷 1960ஆம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
🌷 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, தன்னுடைய 70வது வயதில் மறைந்தார்.
Social Plugin