Type Here to Get Search Results !

ஜூன்23

👉 சர்வதேச கைம்பெண்கள் தினம்

👉 ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்


🌷 2010ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலக தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.

🌷 1894ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி பன்னாட்டு ஒலிம்பிக் குழு சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.

🌷 1980ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான வி.வி.கிரி மறைந்தார்.

🌷 1940ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலகின் வேகமான பெண் வில்மா குளோடியன் ருடால்ஃப் (தடகள வீராங்கனை) அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில் பிறந்தார்.


சர்வதேச கைம்பெண்கள் தினம்

🌷 உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

🌷 உலகம் முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம்

🌷 அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே, அவர்களின் சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஆம் தேதியை பொதுச்சேவை தினமாக அறிவித்தது.

🌷 சேவை செய்யும் பண்பானது, நல்லொழுக்கத்தின் அடையாளமாக இருக்கிறது. பொதுச்சேவையை ஊக்குவிக்கவும், சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கவும் ஐ.நா. பொதுச்சபை இத்தினத்தை கொண்டாடி வருகிறது.


அலன் மாத்திசன் டூரிங்

🌷 தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing) 1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 இவரது ஆட்டோமேடிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.

🌷 இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் (Turing Test) எனக் குறிப்பிடப்படுகிறது.

🌷 நவீன கணினி, Artificial Intelligence, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் தனது 41வது வயதில் (1954) மறைந்தார்.