👉 சுப்பிரமணிய சிவா நினைவு தினம்
🌷 1829ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
🌷 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.
🌷 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.
🌷 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.
🌷 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் (1920) மறைந்தார்.
🌷 இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.
🌷 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.
🌷 கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்' என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்' என்று அழைக்கப்பட்டார்.
🌷 சுதந்திரத்தை அடைய, இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
🌷 லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931-ல் இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.
🌷 விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.
🌷 திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.
🌷 'ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 41வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin