Type Here to Get Search Results !

ஜுலை24

👉 எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் பிறந்த தினம்


🌷 1985ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலையை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார்.

🌷 1974ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நியூட்ரானை கண்டுபிடித்த சர் ஜேம்ஸ் சாட்விக் மறைந்தார்.


அலெக்ஸாண்டர் டூமாஸ்

🌷 உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர் தனது 20வது வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.

🌷 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ', 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்', 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்' ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.

🌷 சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என 1,200 நூல்களை எழுதியுள்ளார்.

🌷 எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 68வது வயதில் (1870) மறைந்தார்.