Type Here to Get Search Results !

பிப்ரவரி 25

👉 மெஹர் பாபா பிறந்த தினம்


🌷 1988ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி (prithvi missile) ஏவப்பட்டது.

🌷 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்.

🌷 1950ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் மினாட் மறைந்தார்.


மெஹர் பாபா

🌷 கருணைக்கடல் என்று போற்றப்படும் மெஹர் பாபா 1894ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மெர்வான் ஷெரியர் இரானி.

🌷 இவர் தன்னுடைய 19வது வயதில், ஹஸரத் பாபாஜான் என்ற முஸ்லிம் பெண் துறவியை சந்தித்தார். அது அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து விலகி துறவு மேற்கொண்டார்.

🌷 கருணை உள்ளம் படைத்தவர் என்று பொருள்படும் வகையில் சீடர்கள் இவரை 'மெஹர் பாபா' என்று அழைத்தனர். இவர் 1922ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் சேர்ந்து மும்பையில் 'மன்ஸில்-இ-மீம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

🌷 மேலும் இவர் 1925ஆம் ஆண்டுமுதல் வாழ்நாள் கடைசி வரை சுமார் 44 ஆண்டுகளுக்கு மௌனமாக இருந்தார். சைகை, எழுத்து மூலமாகவே தன் கருத்தை தெரிவிப்பார்.

🌷 ஏழை, எளியவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் எண்ணற்ற தொண்டுகள் செய்த இவர் தன்னுடைய 74வது வயதில் (1969) மறைந்தார்.