🌷 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கவிஞர் விக்டர் ஹ்யுகோ பிரான்ஸில் பிறந்தார்.
👖 உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார்.
👖 கலிபோர்னியாவில் 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தபடியே இருந்தார்.
👖 கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால், தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும், தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார்.
👖 டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
👖 அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு, 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ள10 ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது.
👖 தனது வியாபார உத்தியாலும், கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று, வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 73வது வயதில் (1902) மறைந்தார்.
🌷 தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை' என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.
🌷 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு அரசு 2010-2011ஆம் ஆண்டில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
🌷 புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள், கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆகியவை இவரது படைப்புகளாகும். கவிஞாயிறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் இவர் தன்னுடைய 53வது வயதில் (2000) மறைந்தார்.
Social Plugin