Type Here to Get Search Results !

ஜுலை25

👉 உலக கருவியல் தினம்


🌷 1920ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மரபணுவின் சரியான வடிவத்தை கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் லண்டனில் பிறந்தார்.

🌷 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிரதிபா பாட்டீல், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார்.


உலக கருவியல் தினம்

🌷 உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன்பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப்பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.

🌷 முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.



செம்மங்குடி சீனிவாச ஐயர்

🌷 மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.

🌷 இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார்.

மேலும், 1927-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

🌷 இவர் சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌷 அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95வது வயதில் (2003) மறைந்தார்.