👉 தமிழறிஞர் கா.அப்பாத்துரை நினைவு தினம்
🌷 1969ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பியது.
🌷 1884ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி கர்நாடக இசைக் கலைஞர் மகா வைத்தியநாத ஐயர் தஞ்சாவூர் மாவட்டம் வையச்சேரி என்கிற கிராமத்தில் பிறந்தார்.
🌷 1884ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி கர்நாடக இசைக் கலைஞர் மகா வைத்தியநாத ஐயர் தஞ்சாவூர் மாவட்டம் வையச்சேரி என்கிற கிராமத்தில் பிறந்தார்.
அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் விண்வெளி வீரரான சாலி ரைட் 1951ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார்.
இவர் 1978-ல் நாசாவில் சேர்ந்தார். மேலும், 1983-ல் விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்ற வரலாற்றை படைத்தார். இவர் மொத்தம் 343 மணி நேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.
ஆர்பிட்டர் சேலஞ்சரில் இரண்டு முறை பறந்து சென்ற பிறகு, இவர் 1987-ல் நாசாவை விட்டுச் சென்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
தேசிய வீராங்கனையாக மதிக்கப்படும் இவர் தனது 61வது வயதில் (2012) மறைந்தார்.
ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.
தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா தனது 78வது வயதில் (2015) மறைந்தார்.
1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பன்மொழிப்புலவர் தமிழறிஞர் கா.அப்பாத்துரை மறைந்தார்.
Social Plugin