Type Here to Get Search Results !

மே 27

👉 ரவி சாஸ்திரி பிறந்த தினம்

👉 ஜவஹர்லால் நேரு நினைவு தினம்


🌷 1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்தார்.

🌷 1937ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.


ரவி சாஸ்திரி

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.

இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். பிறகு ஆல்ரவுண்டராக மாறினார்.

இவர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக பங்கேற்று முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானார்.

இவர் கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1994-ல் ஓய்வு பெற்ற இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இன்று 57வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.




1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மறைந்தார்.

1910ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஜெர்மானிய அறிவியலாளர் ராபர்ட் கோச் (Robert Koch) மறைந்தார்.