Type Here to Get Search Results !

அக்டோபர்26

👉 ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்


🌷 1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவில் இலினாய்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.

🌷 1947ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.


கணேஷ் சங்கர் வித்யார்த்தி

🌷 விடுதலை போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.

🌷 இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்து வந்தவர், 'ஹமாரி ஆத்மோசர்கதா' என்ற தனது முதல் நூலை 16வது வயதில் எழுதினார்.

🌷 அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் காந்திஜியை முதன்முறையாக 1916ல் சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

🌷 விடுதலை போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், ஜாதி, மதப் பிரச்சனைகள் குறித்து தனது இதழ்களில் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

🌷 உத்தரப்பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். எழுத்தையே ஆயுதமாக்கி எழுச்சிப் போராட்டம் நடத்திய இவர் தனது 40வது வயதில் (1931) மறைந்தார்.


🌷 1957ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி கெர்டி கோரி மறைந்தார்.