🌷 1858ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட், நியூயார்க் நகரில் பிறந்தார்.
🌷 1961ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
🌷 1961ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
🌷 காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், ஸ்ரீநகர் விமான நிலையத்தை கைப்பற்ற நினைத்த தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றனர். இதைப் போற்றும் விதமாக இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
🌷 உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🌷 தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ல் அனுசரிக்கப்பட்டது.
ஜத்தின் தாஸ் என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். 1921ஆம் ஆண்டு அண்ணல் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1929 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் சாகும் வரை உண்ணா நோன்பை லாகூர் சிறையில் துவக்கினார். 60 நாட்கள் மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம் ஜத்தின் தாஸின் மரணத்தால் முடிவுற்றது.
1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஜத்தின் தாஸ் உயிர் நீத்தார்.
🌷 1605ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முகலாய மன்னன் அக்பர் மறைந்தார்.
Social Plugin