Type Here to Get Search Results !

டிசம்பர்26

👉 சுனாமி தினம்

👉 சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்


🌷 சுனாமி நினைவு தினம் : 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சுனாமிப் பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 14-வது ஆண்டு நினைவு தினம் இன்று.

🌷 1999ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா மறைந்தார்.

🌷 1898ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.

🌷 1981ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகை சாவித்திரி மறைந்தார்.


சார்லஸ் பாபேஜ்

🌷 கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.

🌷 தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

🌷 இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ஆம் ஆண்டு மறைந்தார்.


பாபா ஆம்தே

🌷 'பாபா ஆம்தே' என்று அன்புடன் அழைக்கப்பட்ட முரளிதர் தேவிதாஸ் ஆம்தே 1914ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் ஹிங்கான்கட் என்ற கிராமத்தில் பிறந்தார்.

🌷 இவர் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களுக்காக வாதாடினார்.

🌷 காந்திஜி இவரை அபய சாதகன் (துணிவுடன் சத்தியத்தைத் தேடுபவன்) என்று அழைப்பார். இவர் தொழுநோயைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். இவருக்கு அரசு சிறிது நிலம் வழங்கியது. அங்கே சிறு குடில்களை அமைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு கைத்தொழில் பயிற்சி கற்றுக்கொடுத்து, அதில் கிடைத்த லாபத்தை வைத்து பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.

🌷 1988ஆம் ஆண்டு இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரை தொடங்கினார். பத்ம விபூஷண், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே ஆகிய ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

🌷 தன் இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்டு வந்த பாபா ஆம்தே 2008ஆம் ஆண்டு தன்னுடைய 93-வது வயதில் மறைந்தார்.