👉 லூயி பாஸ்டர் பிறந்த தினம்
🌷 1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
🌷 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.
🌷 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.
🌷 ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார்.
🌷 இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்' என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.
🌷 இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா', 'ஹார்மோனிஸ் முன்டி' ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.
🌷 கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா' என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார்.
🌷 இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்' என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 58வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
🌷 நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
🌷 இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
🌷 தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது.
🌷 இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.
🌷 ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
🌷 இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72வது வயதில் (1895) மறைந்தார்.
Social Plugin