Type Here to Get Search Results !

டிசம்பர் 28

👉 திருபாய் அம்பானி பிறந்த தினம்


🌷 1936ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன் சென்னையில் பிறந்தார்.

🌷 1612ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

🌷 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது.


திருபாய் அம்பானி

🌷 இந்தியத் தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி.

🌷 இவர் மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் புகழ் பெற்றவர்.

🌷 1982ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர் 1996, 1998 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட (பவர்-50) ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும், இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

🌷 ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, பங்குசந்தைகளின் முடிசூடா மன்னனாக விளங்கிய திருபாய் அம்பானி 69வது வயதில் (2002) மறைந்தார்.


ரத்தன் டாட்டா

🌷 இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாட்டா 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பம்பாயில் பிறந்தார்.

🌷 இவர் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய டாடா நிறுவனங்களுக்கு தலைவராக உள்ளார்.

🌷 இவர் 2008ஆம் ஆண்டு நானோ காரை வடிவமைத்தார். 2008ஆம் ஆண்டு, NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். மேலும் இவர் பத்ம பூஷண் (2000), பத்ம விபூஷண் (2008) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.