Type Here to Get Search Results !

அக்டோபர்29

👉 கவிஞர் வாலி பிறந்த தினம்


🌷 1985ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இந்திய குத்துச்சண்டை வீரர், விஜேந்தர் சிங் அரியானா மாநிலத்தில் பிறந்தார்.

🌷 1969ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உலகில் முதல்முறையாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கான தொடுப்பு ஆர்பநெட் (ARPANET) மூலம் இணைக்கப்பட்டது.


கவிஞர் வாலி

🌷 தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.

🌷 1958ஆம் ஆண்டு 'அழகர் மலைக் கள்வன்' என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ஆம் ஆண்டு 'கற்பகம்' என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

🌷 ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

🌷 இதுமட்டுமல்லாமல் பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

🌷 திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் தனது 81வது வயதில் (2013) மறைந்தார்.