Type Here to Get Search Results !

ஜூன் 2

👉 இசைஞானி இளையராஜா பிறந்த தினம்


🌷 1956ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைப்படத்துறையில் ஒரு மாமேதையாக போற்றப்படும் மணிரத்னம் மதுரையில் பிறந்தார்.

🌷 1882ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி(Garibaldi) மறைந்தார்.

📻 1896ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.


இளையராஜா

🎼 திரையுலகின் முடிசூடா மன்னன் இசைஞானி இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா.

🎼 இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976-ல் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

🎼 இவருக்கு இளையராஜா என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்குப் புதுசு ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

🎼 இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

🎼 லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில்(Royal Philharmonic Orchestra) சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

🎼 பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார்.

🎼 இசை ராஜாங்கத்தின் இசைஞானி இன்று 75வது வயதில் வெற்றியுடன் அடியெடுத்து வைக்கிறார்.