👉 தாதாசாஹேப் பால்கே பிறந்த தினம்
👉 அடால்ஃப் ஹிட்லர் நினைவு தினம்
🌷 1777ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தலைச்சிறந்த கணித வல்லுநர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் பிறந்தார்.
🌷 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
🌷 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
🎷 சர்வதேச ஜாஸ் தினம் ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2011ஆம் ஆண்டு அறிவித்தது. ஜாஸ் என்பது இசையை விட மேன்மையானது.
🎷 ஜாஸ் இசையானது தடைகளை உடைத்து, பரஸ்பரம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது. கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. ஜாஸ், பெண் சமத்துவத்தையும் வளர்க்கிறது. இளைஞர்களை சமூக மாற்றத்திற்கு உட்படுத்துகிறது.
🎬 இந்தியத் திரையுலகின் தந்தை, தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரின் இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.
🎬 பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.
🎬 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
🎬 தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.
🎬 வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் (1944) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
🌷 இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற இடத்தில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்தார்.
🌷 இவர் மிக சிறந்த ஓவியர். உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். 1934ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.
🌷 பெயரைக் கேட்டாலே உலகமே நடுங்கும் ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என்று அழைக்கப்படும் இவர் தனது 56வது வயதில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மறைந்தார்.
Social Plugin