Type Here to Get Search Results !

ஏப்ரல் 29

👉 சர்வதேச நடன தினம்

👉 உலக ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினம்

👉 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்

👉 ஓவியர் ராஜா ரவிவர்மா நினைவு தினம்


🌷 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி காலத்தால் அழியாத பல ஓவியங்களை படைத்த ஓவியர் ராஜா ரவிவர்மா கேரள மாநிலம், திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூரில் பிறந்தார்.


சர்வதேச நடன தினம்

🌷 சர்வதேச நடன கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடி வருகிறது. மேலும், ஜீன் ஜார்ஜ்ஸ் நோவீர் என்ற நடனக் கலைஞர் பிறந்த தினத்தை (ஏப்ரல் 29), சர்வதேச நடன தினமாக கொண்டாடப்படுகிறது.


உலக ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினம்

🌷 ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். ரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பாவேந்தர் பாரதிதாசன்

🌷 தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

🌷 1937ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத்தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பாதவர்.

🌷 பாடப் புத்தகங்களில் அ - அணில் என்று இருந்ததை, அ - அம்மா என்று மாற்றியவர். இலக்கியக் கோலங்கள், இளைஞர் இலக்கியம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குமரகுருபரர் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.

🌷 இவர் 1954ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவரது பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தம் எழுச்சிமிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் 72வது வயதில் (1964) மறைந்தார்.