Type Here to Get Search Results !

ஜூன் 30

👉 தாதாபாய் நவுரோஜி நினைவு தினம்

👉 சர்வதேச சிறுகோள் தினம்

👉 சர்வதேச பாராளுமன்றவாத தினம்


🌷 2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) வெளியிடப்பட்டது.

🌷 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார்.


சர்வதேச சிறுகோள் தினம்

🌷 30 ஜூன் 1908 இல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில செக்கன்களுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின.

🌷 பூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.

🌷 நல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாகும். அதனால் ஒருவரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை.

🌷 இந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.

🌷 109 வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எம்மால் இப்படியான நிகழ்வுகளை எதிர்வுகூறும் முறைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று சிறுகோள்களை கண்டறியவும் அவதானிக்கவும் பல செயற்திட்டங்கள் உள்ளன.

🌷 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2016 டிசம்பரில் A/RES/71/90 என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஜூன் 30 ஐ சர்வதேச சிறுகோள் தினமாக (International Asteroid Day) அறிவித்தது. துங்குஸ்கா நிகழ்வின் (Tunguska event) ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 30 தேதி தேர்வு செய்யப்பட்டது.

🌷 ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர்.



சர்வதேச பாராளுமன்றவாத தினம்

🌷 ஜூன் 30 என்பது சர்வதேச பாராளுமன்றவாத தினத்தை கொண்டாட நியமிக்கப்பட்ட தினமாகும். 1889 ஆம் ஆண்டு ஜூன் 30ல், பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான பாராளுமன்றங்களுக்கு இடையேயான மையம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

🌷 இந்த நாள் பாராளுமன்றங்களையும், அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகளையும் கொண்டாடுகிறது.

🌷 பாராளுமன்றங்கள் சவால்களை அடையாளம் காண்பதற்கும், அவற்றை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான வழிகளுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



மைக் டைசன்

🌷 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

🌷 இவர் 1982-ல் ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட் (heavyweight) சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்' என்ற பெருமையை பெற்றார்.

🌷 ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றவர்.

🌷 இவர் 2006ல் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். புகழின் உச்சியில் சாதனை வீரராக திகழ்ந்த 'இளம் வெடி', 'இரும்பு மைக்' என போற்றப்படுகின்ற இவர் தனது 53வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


பால் பெர்க்

🌷 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் (Paul Berg) 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

🌷 நியூக்ளிக் அமிலங்களின் (nucleic acids) உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

🌷 அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

🌷 ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வௌ;வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கிய முதல் விஞ்ஞானி பால் பெர்க் இன்று 93வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


தாதாபாய் நவ்ரோஜி

🌷 சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🌷 இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.

🌷 1852-ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

🌷 இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

🌷 இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

🌷 'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா' என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

🌷 சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92வது வயதில் 1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி மறைந்தார்.